தயாரிப்பாளர் தணிகைவேல் பாஜக-விலிருந்து நீக்கம்?

பாஜக மாநில தலைமை தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக எனக்கு தகவல் வரவில்லை ஆனாலும் பாஜகவில் தான் இருப்பேன் என எஸ்.தணிகைவேல் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் தணிகைவேல் பாஜக-விலிருந்து நீக்கம்?

பாஜக திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வணிக பிரிவின் மாநில துணை தலைவராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருப்பவர் எஸ்.தணிகைவேல். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும்,எந்தவித செயல்பாடுகளும் இல்லாத கரணத்தினாலும் தணிகவேலை பாஜகவின் கட்சி பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பிணிரலிருந்தும் நீக்கப்படுவதாக பாஜக தலைமையில் இருந்து அறிவிப்பு ஒன்று ஊடங்கங்கள் வாயிலாக வெளிவந்தது.

இதனை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக வந்த செய்தி மூலமாகவே எனக்கு தெரியவந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் இதுவரை கட்சி தலைமையில் இருந்து எனக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை என்று தெரிவித்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தான் வெளியூரில்  இருப்பதாகவும்  சென்னைக்கு வரும் 10ஆம் தேதி தான் வரவுள்ளதாக தெரிவித்தார்.

எனவே வரும் பத்தாம் தேதி அன்று தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து நீக்கப்பட்ட காரணம் குறித்து பேச உள்ளதாகவும் கூறினார். மாற்று கட்சி இணைய வாய்ப்பு உள்ளதா குறித்த கேள்விக்கு பதிலளித்த தணிகைவேல் என் உயிர் இருக்கும் வரையில்  பாஜகவின் தான் இருப்பேன் ஒரு துளி அளவு கூட மாற்று கட்சியுடன் சேர மாட்டேன் என்றும் கூறினார். பாஜகவின் மாநில வர்த்தக அணியில் பணியாற்றி இன்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. திருவண்ணாமலை, விழும்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர்  மாவட்டம், திருப்பத்தூர், வாணியம்பாடி நான்கு சட்டமன்றத் தொகுதியில் பல கோடி ரூபாய் கட்சிக்காக செலவு செய்து வருவதாகவும் அதற்கான ஆதாரங்களை பட்டியலிட்டு காட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.