டெங்கு பரவல் அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பரவல் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

தமிழ் நாடு முழுவதும் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில்,  37 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 151 நபர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தொிவித்தனா். மேலும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதி அளவு மருந்து மாத்திரைகள் இருப்பில் உள்ளதாக மருத்துவத்துறையினா் குறிப்பிட்டனர்.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டை மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேரும், முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6 பேரும் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு பிரிவு அமைக்கப் பட்டுள்ளதாகும் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். வந்தவாசி சுற்று வட்டார பகுதிகளான சென்னாவரம், நல்லூர், வல்லம், நெல்லியாங்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 5 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இரண்டு பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை திட்டம்; பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!