இஸ்ரோ-வில் கால் பதித்த அரசு பள்ளி மாணவர்கள்...

2 அரசு பள்ளி மாணவர்கள் செயற்கை கோளை தயாரிக்க இஸ்ரோவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட பயிற்சி முடிந்து திரும்பிய மாணவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இஸ்ரோ-வில் கால் பதித்த அரசு பள்ளி மாணவர்கள்...

75 மாணவர்களின் செயற்கைக் கோளை விண்ணில் ஏவுதலே இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவின் குறிக்கோளாகும் என பிரதமர் மோடி ஐ.நா. சபையில் உரையாற்றினார். அதன்படி 26 மாவட்டங்களை சேர்ந்த 86 அரசு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் குறித்த செயற்கை கோள் தயாரிப்புக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!!!

அந்த வகையில்,  சென்னை அடுத்த புழல் காந்தி தெருவில் உள்ள  ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்றுவரும், லேனேஸ்வர் மற்றும் பிரகதீஷ் என்ற இரண்டு மாணவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்  செயற்கைக்கோள் குறித்து இணைய வழியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கிய இஸ்ரோ!!!

பயிற்சியில், இஸ்ரோ பேராசிரியர்கள் டாக்டர் ஏ. சிவதாணு பிள்ளை,  ஆர்.எம்.வாசகம், முனைவர் இளங்கோவன், டாக்டர் ஆர். வெங்கடேசன் உள்ளிட்ட புகழ்பெற்ற விஞ்ஞானிகள் தமிழிலேயே இந்த மாணவர்களிடம் கலந்துரையாடி பயிற்சி அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 2-ம் தேதி முதல் 5 -ம் தேதி வரை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தேசிய செயற்கைகோள் தயாரிப்பு நிலையமான உடுப்பி ராமச்சந்திரா விண்வெளி மையத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட்..!

செயற்கைக்கோள் தயாரிப்பில் முதல் கட்ட பயிற்சி முடிந்துள்ள நிலையில், மாணவர்கள்  லேனேஸ்வர் மற்றும் பிரகதீஷ் இருவரும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இவர்களை, ஒருங்கிணைப்பாளர் கவிதா, தலைமை ஆசிரியர் ஜான்சி ராணி, வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என பலரும் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர். 

மேலும் படிக்க | யானையின் எடை கொண்ட ஏவுகனை.. 23-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ மும்மரம்..!

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்துவரும் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பு குறித்தும் தாங்கள் கற்றுக் கொண்டவைகள் குறித்தும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தனர். அரசு பள்ளிகளில் கிடைக்கும் சலுகைகளை பெற்றுக் கொண்டு, கல்வியில் மட்டுமின்றி, அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாணவர்கள் உச்சம் தொட வேண்டும் என்பதே ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க | ககன்யான் திட்டம் : முதலாவது சோதனை விண்கலம் எப்போது அனுப்பப்படுகிறது..? மத்திய அமைச்சர் தகவல்..!

"அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்". இவர்களின் கண்டுபிடிக்கும் செயற்கை கோள் விண்ணில் ஜொலிப்பது போன்று, இந்த மாணவர்களின் எதிர்காலமும் ஜொலிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...

மாலை முரசு செய்திகளுக்காக செங்குன்றம் செய்தியாளர் அகமது அலி...

மேலும் படிக்க | 2 செயற்கை கோள்களும் செயலிழந்து விட்டன.. இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!