டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தை நிராகரித்தார் ஆளுநர்!

டிஎன்பிஎஸ்சி தலைவர்  நியமனத்தை நிராகரித்தார் ஆளுநர்!

தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக காவல் துறை முன்னாள் இயக்குநர் சைலேந்திர பாபுவை நியமிக்க தமிழ்நாடு அரசின் அளித்த பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர் சைலேந்திரபாபு. அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக தமிழக அரசு நியமனம் செய்து கவர்னர் மாளிகைக்கு கோப்புகளை அனுப்பி இருந்தது. சில விளக்கங்களை கேட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு கவர்னர் ஆவணத்தை திருப்பி அனுப்பி இருந்தார்

இதையடுத்து, தமிழக அரசும் அவருக்கு பதில் அளித்திருந்தது. இந்த பதிலில் திருப்தி இல்லை என கூறி கவர்னர் மீண்டும் நிராகரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தேர்வு செய்யப்பட்ட முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் வேறு ஒருவரை தேர்வு செய்யுமாறும் குறிப்பிட்டு கோப்புகளை திருப்பி அனுப்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க   |  மிகவும் பாதுகாப்பான நகரம் ..! உலகப் பட்டியலில் 208-வது இடம்பிடித்தது சென்னை..!