இனி இது இருந்தால் தான் அனுமதி... தமிழக அரசின் திட்டம் இன்றுமுதல் அமல்...

இன்று முதல் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு வருவதற்கு அனுமதி

இனி இது இருந்தால் தான் அனுமதி... தமிழக அரசின் திட்டம் இன்றுமுதல் அமல்...

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு ஒரு வாரமாக அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கண்காணிப்பை தீவிர படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில்  கேரள, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  

இந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடியவர்களுக்கு ஏற்கனவே உடல் வெப்பநிலை மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் வெளி மாநிலங்களில் இருந்து  தமிழகத்திற்கு பேருந்துகள் ரயில்கள் மற்றும் விமானம் மூலமாக வரக்கூடியவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரொனா தொற்று இல்லை என்ற சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கும் நிலையில் இன்று முதல் இந்த திட்டம் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.