40 நிமிடம் வெளுத்து வாங்கிய மழை: அரசு பேருந்துகளில் ஒழுகிய மழைநீர்  

கோவில்பட்டியில் 40 நிமிடங்கள் மழை வெளுத்து வாங்கிய நிலையில், அரசு பேருந்துகளில் மழைநீர் அருவியாக கொட்டியது. இதனால் பயணிகள் அனைவரும் நின்று கொண்டே பயணம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென 40 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்க, அவ்வழியை கடந்து சென்ற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

பசும்பொன் நகர், நடராஜபுரம், ஜமீன் பேட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தண்ணீரில் மிதந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், பாலத்தில் குப்பைகள் அடைத்து கொண்டதால், அதன் வழியாக செல்ல வேண்டிய மழைநீர், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டது.

இதனிடையே, அரசு பேருந்துகளில் ஒழுகிய மழைநீரால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இருக்கையில் அமர முடியாமல் நின்று கொண்டே பயணித்தனர்.