எங்கே போனது நமது வீரம்; எங்கே போனது நமது விவேகம்? விஸ்வாசமே இல்லையா? - அஜித் பட பேர் சொல்லி பொங்கிய ராமதாஸ்...

எங்கே போனது நமது வீரம், எங்கே போனது நமது விவேகம், எங்க போனது நமது உழைப்பு என பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களில் மத்தியில் ஆவேசமாக பேசினார்.

எங்கே போனது நமது வீரம்; எங்கே போனது நமது விவேகம்? விஸ்வாசமே இல்லையா? - அஜித் பட பேர் சொல்லி பொங்கிய  ராமதாஸ்...

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ம.க தலைவர் ஜி.கே மணி தலைமை  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். பா.ம.க. வின் அடுத்தகட்ட நடவடிக்கை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை எப்படி சந்திக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.


இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 'நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் போட்டியிட 23 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று இருந்தால் அடுத்த ஆளுங்கட்சியாக கூட பாமக வந்து இருக்கும் என மக்கள் நினைத்து இருப்பார்கள் என்று கூறினார். ஆனால் நாம் எங்கோ தவறி விட்டோம். இனி தவற விடக்கூடாது. எங்கே போனது நமது வீரம்; எங்கே போனது நமது விவேகம்; எங்க போனது நமது உழைப்பு என்றும் தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ் ஆவேசமாக பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றதை மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.அனுபவ பாத்தியம் உனக்கு இருந்தால் நிலத்துக்குச் சொந்தக்காரன் நான் கூறுகிறேன். குறவர், நரிக்குறவர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மற்ற அனைவரும் வெளியேறுங்கள் என்றும் டாக்டர் ராமதாஸ் பேசினார்.