உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க கோரிக்கை...!

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க கோரிக்கை...!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த  எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூவர் உயிரிழந்துள்ளது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் உயிரிழந்ததையும், 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும் அறிந்து வேதனையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : வார் ரூம்-மை அலங்கரித்த தமிழர்... தாமரையை வீழ்த்தி காட்டிய ஐ.ஏ.எஸ் டீம்!

மேலும்,  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என்றும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.