இராமநாதபுரம்: ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி ஆட்சியரிடம் மனு..!

இராமநாதபுரம்: ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி ஆட்சியரிடம் மனு..!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி 25 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி 25 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊரை காலி செய்வதாக தெரிவித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மாரியூர் ஊராட்சி மடத்தாகுளத்தில் 85 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு இடம் வாங்கி கொடுத்தது தொடர்பாக இருதரப்பில் பிரச்சனை நிலை வருகின்றது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 25 குடும்பங்களை மடத்தாகுளத்தைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் ஊரை காலி செய்யப்போவதா தெரிவித்தனர்.

மேலும் ஊரில் நடக்கக்கூடிய விழாக்கள், இறப்புகளில் தங்களை கலந்து கொள்ள விடாமல் தடுப்பதாகவும், காவிரி கூட்டுக் குடிநீர் தண்ணீர் பிடிக்க விடாமல் தடுத்து வருவதோடு, 100 நாள் வேலைக்கு சென்றால் வேலை செய்ய விடாமல் தடுப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

இதையும் படிக்க    | மணிப்பூரில் நிலத்தை அபகரிக்க கார்ப்பரேட்டு முயற்சி..! - டி. ராஜா குற்றச்சாட்டு.