துரித காசநோய் தடுப்பு முகாம்...! நடமாடும் வாகனத்தில் பொதுமக்களுக்கு பரிசோதனை...!

சோழவரத்தில் துரித காசநோய் தடுப்பு முகாம்... 200க்கும் மேற்பட்டோர் பங்கேறப்பு...

துரித காசநோய் தடுப்பு முகாம்...! நடமாடும் வாகனத்தில் பொதுமக்களுக்கு பரிசோதனை...!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் காசநோய் துணை இயக்குனர் டாக்டர் லட்சுமி முரளி ஆகியோரின் அறிவுத்தலின் படி சோழவரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடமாடும் வாகனம் மூலம் துரித காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.  

இந்த முகாமை, சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகர், ஊராட்சிமன்ற தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன் துவக்கி வைத்தனர். இந்த முகாமில் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட நடமாடும் வாகனத்தில் நவீனமயமாக்கப்பட்ட எக்ஸ்ரே இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு மார்பக பரிசோதனை துல்லியமாக பரிசோதிக்கப்பட்டு காசநோய் உள்ளதா என்ற முடிவுகள் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த முகாம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.