இடிந்துவிழும் நிலையில் ரேஷன்கடை... மழை நீரில் நனைந்த பழுப்படைந்த அரிசி... கவனிக்குமா சம்பந்தப்பட்ட துறை..?

செங்கல்பட்டு அருகே இடிந்து விழும் நிலையில் செயல்பட்டு வரும் 25ஆண்டுகளுக்கும் மேலான ரேஷன்கடை.

இடிந்துவிழும் நிலையில் ரேஷன்கடை... மழை நீரில் நனைந்த பழுப்படைந்த அரிசி... கவனிக்குமா சம்பந்தப்பட்ட துறை..?

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அடுத்த திருத்தேரி பிள்ளையார் கோயில் தெருவில் சுமார் 25ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்ட கடை எண் 108 என்ற ரேஷன்கடை செயல்பட்டடு வருகிறது.

இந்த ரேஷன்கடையில் மேல் கூறை சேதம் அடைந்துள்ளதால் மழை காலங்களில் கட்டிடத்தின் உட்புற சுவரில் மழை நீர் கசிந்து மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள அரிசி, சக்கரை, மற்றும் பருப்பு வகைகளில் மூட்டைகள் அனைத்தும் நீரில் நனைந்து வீணாகி விடுகிறது.

சுமார் 30 மூட்டைகள் இதுபோன்று மழையில் நனைந்து வீணாகி உள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ரேஷன்கடையில் மட்டும் 800 குடும்ப அட்டைகளுக்கான பொருட்கள் வழங்க வேண்டும். 

மழை நீரில் நனைந்த அரிசி  மூட்டைகளில் அரிசி பழுப்படைந்து அரிசியின் கலர் மாறுவதோடு சிறு சிறு பூச்சிகள் உருவாகின்றன. மக்களுக்கு அந்த அரிசியை வழங்கினால் மக்கள் வாங்க மறுப்பதோடு தரமில்லாத அரிசியை வழங்குவதாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் ரேஷன்கடை மேற்பார்வையாளர் வருந்தம் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி மக்கள் பொருட்களை வாங்கி செல்வதற்க்கும் போதிய இடப்பற்றாக்குறை இருப்பதாலும்,
கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளதால் மோசமான நிலையில் செயல்பட்டு வரும் இந்த ரேஷன்கடையை சீறமைத்து தரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.