பள்ளிக்கல்வித்துறையின் டெண்டர் நிபந்தனைகளை தளர்த்தி நீதிமன்றம் உத்தரவு...!

பள்ளிக்கல்வித்துறையின் டெண்டர் நிபந்தனைகளை தளர்த்தி நீதிமன்றம் உத்தரவு...!

அரசு பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு பணியாளர் நியமனத்தில் தமிழ் தெரிந்தவர்களை நியமிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என டெண்டர் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

தமிழ்நாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை அமர்த்த முடிவு செய்யப்பட்டு,  இது தொடர்பாக, டெண்டர் கோரப்பட்டது.

ஆனால், இந்த டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதாவது, இந்த டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் 25 லட்சம் சதுர அடி பரப்பில் செயல்பட வேண்டும் எனவும், கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும் எனவும், 5 ஆயிரம் பணியாளர்களை கொண்டிருக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்திருந்தது.

இதையும் படிக்க : வங்காள பறவையை நீர் தூவி வரவேற்ற சென்னை விமான நிலையம்...!

இதனால் தனியார் நிறுவனம் ஒன்று டெண்டரை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், டெண்டர் நிபந்தனைகளில் தலையிட முடியாது என்றுக்கூறி அந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபந்தனைகளை ரத்து செய்து, புதிய டெண்டர் கோர உத்தரவிட்ட நீதிபதிகள், கிராமபுற மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி, பாதுகாவலர், தூய்மைப் பணியாளர் பணிக்கு தமிழ் தெரிந்தவர்களை நியமிப்பதை கட்டயாமாக்க வேண்டும் என்று டெண்டர் குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.