மக்களே உஷார்...சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! 

தமிழகத்தில் மழை பெய்து வருவதால் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்...சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! 

தமிழகத்தில் கன மழை பெய்து வருவதால் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மதியம் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. அதாவது சென்னையில் மதியம் 2.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை இரவு 10 மணிக்கும் மேல் விடாமல் பெய்து வருகிறது.

இதனால் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கிய காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் மவுண்டுரோடு,எக்மோர், வடபழனி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதிகன மழை பெய்து வருவதால் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 6 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அதை சீர் செய்யும் பணி நடக்கிறது.மேலும் சுரங்கப்பாதையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்துள்ளார்.