பெட்ரோல் டீசல் விலை அதிரடி விலை குறைப்பு... ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ94.92 காசுகளுக்கு விற்பனை...

மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை மீதான வரி குறைப்பை அடுத்து  சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு  5 ரூபாய் 26 காசுகள் குறைந்துள்ளது. டீசல் லி்ட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 16 காசுகள் குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல் டீசல் விலை அதிரடி விலை குறைப்பு... ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ94.92 காசுகளுக்கு விற்பனை...

நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை  வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து  புதிய  உச்சத்தை  தொட்டு வருகிறது. நாட்டில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை  120 ரூபாயை தாண்டியுள்ளது. தமிழக்ததில் 107 ரூபாயை நெருங்கி  விற்பனை செய்யப்பட்டது. இதனால்  அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் எழை நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகினறனர். பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு செவிசாய்க்காமல்  தினம் தோறும் எரிபொருட்களின் விலையை  ஏற்றி  ஏழை மக்களின் தலையில் சுமையை ஏற்றி வருகிறது. 

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து நாட்டு மக்களுக்கு மத்திய அரசு ஆறுதல்  பரிசளித்திருக்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு 5  ரூபாயும் டீசல் மீதான விலையில் 10 ரூபாயும் வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த வலை குறைப்பு  இன்று  அதிகாலை முதல் அமலுக்கு  வந்தது. இதன் காரணமாக சென்னையில் 106 ரூபாய் 66 காசுக்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல்  5 ரூபாய் 26 காசுகள் குறைந்து 101 ரூபாய் 38 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. 

அதேபோல் டீசல் ஒரு லிட்டர் 102 ரூபாய் 59 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 11 ரூபாய் 16 காசுகள் குறைந்து 91 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு  சற்று ஆறுதல் கொடுத்தாலும் மேலும் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதேபோல் புதுசேரியிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது. பெட்ரோல்  லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசும், டீசல் விலை 19 ரூபாயும் குறைத்து  புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 92 காசுகளாகவும் டீசல் 83 ரூபாய் 57 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.