பெண்ணின் கழுத்துக்குள் குத்திய தையல் ஊசி... எப்படி சிக்கியது தெரியுமா..?

கோவையில் இளம்பெண்ணின் கழுத்துக்குள் குத்திய தையல் ஊசியை, அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

பெண்ணின் கழுத்துக்குள் குத்திய தையல் ஊசி... எப்படி சிக்கியது தெரியுமா..?

கோவை மாவட்டம் தியாகராய வீதியை சேர்ந்த 19 வயது பெண், கழுத்தில் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரது கழுத்தின் வெளிப்புற காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் குணமான பிறகும் இளம்பெண்ணிற்கு கழுத்து வலி இருந்துள்ளது.

இதனையடுத்து, சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, கழுத்தில் மூச்சுக்குழாயில் இருந்து, கழுத்து தண்டுவட பகுதியில் மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தின் அருகே மிகவும் சிக்கலான இடத்தில் ஊசி சொருகியது போல் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து இளம்பெண்ணிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது, தாம் தற்கொலை செய்வதற்காக நீளமான தையல் ஊசியை எடுத்து கழுத்தில் குத்திக் கொண்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, அந்த இளம்பெண்ணின் கழுத்துக்குள் குத்தியிருந்த ஏழரை சென்டி மீட்டர் நீளமுள்ள தையல் ஊசியை நுட்பமாக அகற்றினர். தற்போது அந்த இளம்பெண் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.