'மணல் எடுப்பது தொடர்பாக வழங்கப்படும் விதிமுறைகள் குறித்து பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்..!' - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

 'மணல் எடுப்பது தொடர்பாக வழங்கப்படும் விதிமுறைகள் குறித்து  பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்..!' - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

 மணல் எடுப்பது தொடர்பாக வழங்கப்படும் விதிமுறைகள் குறித்து பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் உப்புக்கோட்டையை சேர்ந்த சமாதானம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பாம்பாற்று பகுதியில் மணல் எடுக்க தனியார் குவாரிக்கு கடந்த 2022 செப்டம்பர் 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளதாகவம்,  ஆனால் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட  அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அதோடு அனுமதி பெற்ற அளவைத் தாண்டி மணல் எடுக்கப்பட்டு, வணிக நோக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது எனவும்,  5 மணல் அள்ளும்  இயந்திரங்கள் மூலம் 100 லாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுவருகிறது என்றும்  அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார். 

மேலும், அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதால்,  நிலத்தடி நீர் அதிக ஆழத்திற்கு செல்வதோடு, பல இயற்கை சீற்றங்களும் ஏற்பட காரணமாக இருப்பதால் அதை முறைப்படுத்தக் கோரி நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வழங்கிய நிலையிலும், இதுபோன்று சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது தொடர்ந்து வருகிறது. 
 
ஆகவே இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா, பாம்பாற்றுப்பகுதியில் மணல் அள்ள வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதோடு, மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் மேலும் விதிகளை மீறி மணல் அள்ளியவர்கள் மீதும், அதற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும்  கூறியிருந்தார்.

இதையும் படிக்க   }  " 2018 சம்பவம் போல் மீண்டும் தூத்துக்குடியில் நடக்கும்..!" - ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, தனியார் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகையில் மணல் எடுப்பது தொடர்பாக வழங்கப்படும் விதிமுறைகள் குறித்து  தமிழக அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன்6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிக்க   }  "அரசியலில் பேச தகுதி இல்லாதவர் தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை..!" - டி.ஆர்.பாலு