துணிக்கடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்பு...!

சென்னை வண்ணாரப்பேட்டையில் இயங்கி வரும் கேஜிஎப் துணிக்கடையில் பணிபுரிந்து வந்த 3 குழந்தை தொழிலாளர்களை குழந்தை நல அதிகாரிகள் மீட்டனர். 

பொதுவாக குழந்தைகள் படிக்க வேண்டிய வயதில் தங்கள் குடும்ப வறுமையின் காரணமாக ஆங்காங்கே குழந்தை தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். சில நேரங்களில் முதலாளிகளும் தங்அளின் சுய லாபத்திற்காக குழந்தைகளை தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என்று அனைவரும் கூறி வரும் நிலையில், இன்னும் குழந்தை தொழிலாளர்கள் ஒழிந்தபாடில்லை. அவ்வப்போது, குழந்தைகள் நல அதிகாரிகள் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு குழந்தை தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். 

இதையும் படிக்க : கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...!

அந்த வகையில், தற்போது தீபாவளியை முன்னிட்டு குழந்தைகள் நல அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், பிரபல துணிக்கடையான கேஜிஎப் கடையின் 3 கடைகளில் இருந்து மொத்தம் 10 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு மற்றும் ஜீ.ஏ.ரோடு ஆகிய பகுதிகளில் 1000த்திற்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன. இந்த பகுதி வடசென்னையின் தி.நகர் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு தீபாவளி பண்டிகையையொட்டி பிரபல துணிக்கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், அதிகாரிகள் சோதனை செய்ததில் பிரபல துணிக்கடையான கேஜிஎப் கடையின் 3 கடைகளில் இருந்து மொத்தம் 10 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், 3 பேர் குழந்தை தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.