எலும்புக்கூடாக காட்சியளிக்கும் டிரான்ஸ்பார்மர் கம்பம்- குடியிருப்பு மக்கள் அச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே எலும்புக்கூடாக காட்சியளிக்கும் டிரான்ஸ்பார்மர் கம்பத்தை மாற்றியமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எலும்புக்கூடாக காட்சியளிக்கும் டிரான்ஸ்பார்மர் கம்பம்- குடியிருப்பு மக்கள் அச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராம பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் காவேரிப்பட்டிணம் மின் வாரியத்தால் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் மூலம் 250 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இதற்கிடையில் இந்த டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பங்கள் முழுமையாக சேதமடைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. கம்பங்களில் உள்ள சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிவதால் எந்த நேரத்திலும் கீழே விழலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே உள்ளது.

மேலும் போச்சம்பள்ளி-காவேரிப்பட்டிணம் பிரதாக சாலை என்பதால் நூற்றுக்கணக்காக வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். ஆகையால் உடனடியாக சம்பந்தபட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேறு ஒரு டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டுள்ள கம்பங்கள் மாற்றியமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.