என்.எல்.சி -க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு... அண்ணாமலைக்கு அனுப்பப்பட்ட தீர்மானம்....!

என்.எல்.சி -க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு... அண்ணாமலைக்கு  அனுப்பப்பட்ட தீர்மானம்....!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குமராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட விவசாய அணி சார்பில் செயற்குழு கூட்டம்  ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு,  சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி பொதுசெயலாளர் ரவிச்சந்திரன், 
மாவட்ட தலைவர் மருதை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அந்தக் கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன;  

அதில் முக்கியமாக:

Don't rename Neyveli Lignite Corporation' || 'Don't rename Neyveli Lignite  Corporation'     

1. என்.எல்.சி -க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு, மற்றும்  வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், 

2.  வீராணம் ஏரி தூர் வாரி சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும், 

3. காட்டுமன்னார்கோவில் பகுதியில் வேளாண் சந்தை அமைக்கவேண்டும், 

4. குமராட்சி ஒன்றியத்தில் கருப்பூர் முதல் பழைய கொள்ளிடம் வாய்க்கால் வரை வடிகால் வசதி ஏற்படுத்தவேண்டும், 

5. மேலும்,  வடக்கு மாங்குடி பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும், 

போன்ற  பல்வேறு கோரிக்கைத் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.  மேலும், அவற்றை  தீர்மானமாக  நிறைவேற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதையும் படிக்க      }  தமிழக அரசு தன்னிட்சியாக செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது - புரட்சி பாரதம் கட்சி....