உணவகத்தில் கறியில் புழுக்கள் இருந்ததால் பரப்பரப்பு...ஹோட்டலுக்கு சீல்...

உணவகத்தில் கறியில் புழுக்கள் இருந்ததால் பரப்பரப்பு...ஹோட்டலுக்கு சீல்...

உணவகத்தில் கறி வெட்டும் கட்டை பாஸ்புட் உபயோகப்படுத்தும் கறியில் புழுக்கள் இருந்ததால் உணவு பாதுகாப்பு துறை அந்த ஹோட்டலுக்கு நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் ரேணுகா என்ற உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு இன்று உணவு வாங்க வந்த நபர் பாஸ்புட்  தயாரிக்க பயன்படுத்தப்படும் கறி வெட்டும் கட்டையில் கறியோடு சேர்ந்து புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.பின்னர் இதுக்குறித்து கடையின் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரிடம் ஊழியர்கள் தகாத வார்த்தையில் பேசி தாக்கம் முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உணவு வாங்க வந்த இளைஞர் தனது செல்போனில் கறி வெட்டக்கூடிய கட்டை மற்றும் கறிகளில் புழுக்கள் இருப்பதை வீடியோவாக எடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கறி வெட்டக் கூடிய கட்டையில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உணவகம் முழுவதையும் ஆய்வு செய்ததில்  உணவகத்தில் தரமற்ற இறைச்சிகள், உணவு பொருட்கள், இருந்ததை உடனடியாக பறிமுதல் செய்தனர். மேலும் கடையை இழுத்து மூடி பூட்டு போட்டு கடைக்கு அபராதம் விதித்து  நோட்டீஸ் வழங்கியும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். உணவகத்தில் கறி வெட்டும் கட்டை மற்றும் பாஸ் பாஸ்புட் தயாரிக்க பயன்படுத்தும் கறியில் புழுக்கள் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெரிந்துகொள்ள | ஸ்கேன் எடுக்க சென்ற குழந்தை...உயிரிழந்து வந்த அவலம்...மருத்துவர்கள் அலட்சியம் தான் காரணமா?