தென்காசியில் அமைச்சர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை  குறித்த ஆய்வுக் கூட்டம்... 

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தென்காசியில் அமைச்சர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை  குறித்த ஆய்வுக் கூட்டம்... 

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 

இந்த ஆய்வு கூட்டத்திற்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் அணைகளின் நீர்மட்டம், நீர் நிலைகளின் தற்போதைய நிலை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் என்பது போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

 
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தமிழகத்தின் தென் பகுதிகளில் தொழில் வளர்ச்சி என்பது இல்லாமல் உள்ளதாகவும், எதிர் காலத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களுக்கு மையமாக தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.