"புரட்சி தமிழர் பட்டம் தனியரசுக்கே சொந்தம்" கொங்கு இளைஞர் பேரவை கட்சி எச்சரிக்கை!

"புரட்சி தமிழர் பட்டம் தனியரசுக்கே சொந்தம்" கொங்கு இளைஞர் பேரவை கட்சி எச்சரிக்கை!

புரட்சித் தமிழர் பட்டம் தனியரசுக்கே சொந்தம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தனது பட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் எனுவும் கொங்கு இளைஞர் பேரவை கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரையில் கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக எழுச்சிமாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நிலையூர் ஆதீனம் என்ற பெயரில் ஒருவர் புரட்சி தமிழர் என பட்டம் சூட்டினார்.

இந்த நிலையூர் ஆதீனம் எனப்படுபவர் ஆதீனமே இல்லை என பல்வேறு சர்சைகள் ஏற்படுள்ள நிலையில் அடுத்த சர்ச்சையாக புரட்சி தமிழர் பட்டத்திற்கு கொங்கு இளைஞர் பேரைவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புரட்சி தமிழர் என்ற பட்டத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே கொங்கு இளைஞர் பேரவை மாநாட்டில் அதன் தலைவர் தனியரசிற்கு  இவர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து ஒரு வருடமாக சுவர் விளம்பரம், போஸ்டர் , பிளக்ஸ்போர்டு உள்ளிட்ட பல்வேறு விளம்பர பலகைகளில் "புரட்சி தமிழர் தனியரசு" என விளம்பரம் செய்து வருகின்ற போது, தனியரசு பயன்படுத்தி வருகின்ற புரட்சி தமிழர் பட்டத்தை எவ்வாறு அதிமுக மாநாட்டில் சூட்டலாம் என கொங்கு இளைஞர் பேரவையினர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்ட கொங்கு இளைஞர் பேரவை கட்சியினர் எடப்பாடிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் எடப்பாடி பழனிசாமி அரசியல் நாகரீகம் கருதி உடனடியாக புரட்சி தமிழர் பட்டத்தை திருப்பியளிக்க வேண்டும் என கோரியுள்ள அவர்கள், மீண்டும் அந்த பட்டத்தை எடப்பாடி பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்தினால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட கொங்கு இளைஞர் பேரவை கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் ஒரிரு நாட்களில் தமிழகம் முழுவதும் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், கோவை, திருச்சி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக மதுரை மாவட்ட செயலாளர் அய்யூர் தயாளன் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:ஆளுநரை தபால்காரராக சித்தரித்து போஸ்டர்; பொள்ளாச்சியில் பரபரப்பு!