தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்...  கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...

பாபநாசம், காரையார் அணையில் இருந்து சுமார் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்...  கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே  மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம் காரையார் அணை மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே காணப்படுகிறது. இதனால் அணையில் இரு அணைகளில் இருந்தும் காலையில் சுமார்  20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பாபநாசம், காரையார் அணையில் நீர்வெளியேற்றம்  குறைந்ததால் முக்கிய 2 மதகுகள் வழியாக மட்டும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஆற்றின் வெள்ள பெருக்கு காரணமாக காணி மக்கள் தங்கள் தேவைக்கு தொங்கு பலம் அமைத்து அதன் வழியாக கடந்து செலுக்கின்றனர்.

மேலும்  தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காரணமாக சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக சொரிமுத்து அய்யனார் கோவில் அருகேயும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ, கூடாது என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.