அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல் போராட்டம்...!

நாகை அருகே அய்யடிமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலைமறியல்...! மாணவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றியதால் பரப்பரப்பு..!

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல் போராட்டம்...!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அணக்குடி ஊராட்சியில் உள்ள அய்யடிமங்கலம் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி , படித்துறை வசதி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ்குமார், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். பின்னர் பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்ட கலைந்து சென்றனர். 

முன்னதாக சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களையும், மாணவர்களையும்  கீழ்வேளூர் காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றதால் கிராம மக்கள் ஆவேசமடைந்தனர். தொடர்ந்து பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தனர். இதனால் கீழ்வேளூர், கச்சனம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.