ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணி...! அவதியில் தஞ்சை மக்கள்...!

ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணி...! அவதியில் தஞ்சை மக்கள்...!

தஞ்சாவூர் அருகே ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணியால், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.  திருப்பாலத்துறை - திருவலஞ்சுழி சாலை பணி  
ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் வேதனை  தெரிவித்துள்ளனர். ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணியால், அப்பகுதி மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அவ்வழியாக செல்ல முடியாமல் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 

இதையும் படிக்க:... வடமாநில தொழிலாளர்களால் உள்ளூர் ஆட்களுக்கு வேலை இல்லை....! விவசாயிகள் பொதுமக்கள் வேதனை...!

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களும், லட்சக்கணக்கான பயணிகளும் பயணம் செய்து வருகின்றனர். இந்த சாலையானது நீண்ட ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த சாலை பணியை தனியார்  நிறுவனம் அரசிடம் இருந்து ஒப்பந்தம் எடுத்து, தனது பணியை துவங்கியது. 

இந்த சாலை பணியானது ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பசுபதிகோயிலில் இருந்து திருவலஞ்சுழி வரை சாலை பணிகள் ஆமை வேகத்திலே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  தற்போது திருப்பாலத் துறையிலிருந்து கிட்டத்தட்ட திருவலஞ்சுழி வரை  உள்ள சாலைகள் செதுக்கப்பட்ட  நிலையில், தண்ணீர் கூட ஊற்றபடாமல் அப்படியே இருந்து வருவதால், அந்தப் பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது, குடும்பத்தில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாடம் பணிகளை கூட சரிவர செய்ய முடியாமல் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.   

இதையும் படிக்க;... பட்டியலினத்தவருக்கு அனுமதி மறுப்பு...! கோயிலுக்கு சீல்...!!

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சரி செய்து, பொதுமக்களை ஆபத்தில் இருந்தும் இடர்களிலிருந்தும் காப்பாற்ற வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.