தரமற்ற முறையில் அமைக்கப்படும் சாலைகள்...! பொதுமக்கள் குற்றசாட்டு...!

கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்னப்பள்ளம் செல்லக்கூடிய பிரதான சாலை அமைக்கும் பணி தாமதம்

தரமற்ற முறையில் அமைக்கப்படும் சாலைகள்...! பொதுமக்கள் குற்றசாட்டு...!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகவும் உள்ளது. இதனை தொடர்ந்து கொடைக்கானல் - வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்னப்பள்ளம் பகுதிக்கு செல்லக்கூடிய பிரதான சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனை சீரமைத்து தர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதன் அடிப்படையில் தற்போது சீரமைக்கும் பணி மற்றும் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கபட்டு வரும் இந்த சாலை தரமற்ற முறையில் இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியின் வழியே வாகனங்கள் செல்ல முடியாமல் விபத்து ஏற்படும் அபாயமும், அடிக்கடி விபத்தும் ஏற்படுவதாகவும் தெரிவித்து வருகின்றனர். வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். சாலை அமைக்கும் போது தரமான முறையில் அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.