லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - புதரில் வீசப்பட்ட ரூ.15,000 பணம் சிக்கியது

கன்னியாகுமரி அருகே காவல் சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையின் போது, சிறு, சிறு பண்டல்களாக கட்டி, புதரில் வீசப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது.

தமிழகத்தில் இருந்து பல்வேறு கனிம வளங்கள் மற்றும் ரேஷன் பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ரு வருகின்றன. தமிழக எல்லையில்உ ள்ள காவல் துறை சோதனைச் சாவடிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மற்றும் அரல்வாய்மொழி காவல் துறை சோதனைச் சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது,  சோதனைச் சாவடி அருகே உள்ள புதர்களில் சிறு சிறு பண்டல்களாக சுற்றப்பட்டு தூக்கி விசப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகீன்றனர்.