மாணவர்களை ஊக்குவிக்க ரூ.200 கோடி மதிப்பீட்டில் திட்டம்....

பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.  

மாணவர்களை ஊக்குவிக்க ரூ.200 கோடி  மதிப்பீட்டில் திட்டம்....

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13ம் தேதி நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 4 நாட்களாக பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர். தொடர்ந்து, இன்று நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசினார்.

அப்போது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாத சூழ்நிலையில் திடீரென பள்ளிக்குச் செல்வதால் அவர்களுக்கு கல்வி  பயில சிரமம்  ஏற்படும் எனவும், ஆசிரியர்களுக்கும் அதே  நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பள்ளிகள்  மூடப்பட்டிருப்பதால் குழந்தை திருமணங்களும், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட  பிடிஆர், இவற்றுக்கு தீர்வுகாணும் வகையில் இந்த நிதியாண்டிலேயே  200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி   கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.