எஸ்.பி. வேலுமணி ரெய்டு "சுமார் 28 மணி நேரம்" லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை.. சிக்கிய 10 ஆவணங்கள்!!

தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவருக்கு நெருக்கமாக இருந்த அரசு அதிகாரிகள், உறவினர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.

எஸ்.பி. வேலுமணி ரெய்டு "சுமார் 28 மணி நேரம்" லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை.. சிக்கிய 10 ஆவணங்கள்!!

சென்னை ஆதம்பாக்கம் இ.பி. காலனி 3ஆவது தெருவில் பனகல் பில்டிங்கில் உள்ள ஊரக வளர்ச்சி துறை சூப்பிரண்டு பொறியாளர் சரவணக்குமார் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சென்று சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றினர்.

இதனைதொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள ஏ.வி. ஆர் சுவர்ண மகாலில் தொடர்ந்து சுமார் 8 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வருமான வரி சம்பந்தமாக 6 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று மேட்டூர் அடுத்த பெட்டனேரியில் கண்காணிப்பு பொறியாளர் சரவணகுமார் வீட்டில்  நடைபெற்ற 10 மணி நேரத்திற்கு மேலான சோதனையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நான்கு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். 

இதேபோல கோவை வடவள்ளி பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் 10 மணி நேரமாக மேற்கொண்ட சோதனை முடிவடைந்தது. சோதனையின் போது வீட்டின் முன்பு ஏராளமான அதிமுக ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.