”அதிருப்தியை திசை திருப்பவே பாஜகவினர் மீது பொய் வழக்கு”: எஸ்.ஜி.சூர்யா பேச்சு!

”அதிருப்தியை திசை திருப்பவே பாஜகவினர் மீது பொய் வழக்கு”: எஸ்.ஜி.சூர்யா பேச்சு!

விருதுநகர் அருகே நடத்தப்பட்ட பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்,  மாநில செயலாளர் சூர்யா பங்கேற்று, மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள். இதை திசை திருப்புவதற்காக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது பொய் காரணம் சொல்லி கைது செய்கிறார்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பங்கேற்ற மாநில செயலாளர் சூர்யா பேசியதாவது, திமுக அரசை விமர்சனம் செய்பவர்கள் மீது கைது நடவடிக்கையில் ஈடுபடுவதில், நானும் ஒரு பலிகேடாகி விட்டேன் எனக் கூறியுள்ளார்.

மேலும், செந்தில் பாலாஜியின் கைது மட்டுமல்லாமல், மதுரை தெற்கு மாவட்டத்தின் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அதற்கு காரணம் எந்த ஒரு நல்ல திட்டத்தையும் எனது தொகுதி மக்களுக்கு திமுக அரசால் செய்ய முடியவில்லை என்பதே. பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர்களிடமும்,அரசு அதிகாரிகளிடமும், முதல்வரிடமும் வைத்தும் நிறைவேற்ற முடியவில்லை என்று ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அதங்கப்படுகிறார் எனக் கூறியிருக்கிறார். 

மேலும், மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள். இதை திசை திருப்புவதற்காக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது பொய் காரணம் சொல்லி கைது செய்கிறார்கள்.இதுவரை 6 க்கும் மேற்பட்டவர்களை கைது  செய்துள்ளார்கள். ஆனால் நீதிமன்றங்கள் வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது. மத்தியில் உள்ள மோடி அரசு நலத்திட்டங்களை அதிகமாக வழங்குவதை அதை முறையாக செயல்படுத்த முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பது வேதனைக்குறியது, எனவும் பேசியுள்ளார்.

மேலும், திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் கூட்டணி கட்சிகளாக இல்லாமல் திமுகவின் கிளைக் கட்சிகளாக மாறிவிட்டன. எடுத்துக்காட்டாக கம்யூனிஸ்ட் கட்சி 25 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிக் கணக்கு மூலமாக திமுகவினரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு இன்றும் ஒரு அடிமை போல மாறிவிட்டார்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

வேங்கை வயல் சம்பவம், கள்ளச்சாராயத்தால் உயிர்பலி ஏற்பட்டது போன்ற எந்த நிகழ்வுக்கும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டனக் குரலை எழுப்பவில்லை. அதிமுக பாஜக கூட்டணியில் இரண்டு கட்சிகளுமே அதிக இடங்களை ஜெயிக்க வேண்டும், பொதுமக்களை சென்று சந்திக்க வேண்டும் என்ற பசியோடு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இரண்டு கட்சிகளுக்குமே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் சிறு சிறு சலசலப்புகள் ஏற்படுவது இயல்பு. இதனால் கூட்டணி அஸ்திவாரமாக இல்லை என்பது கிடையாது.

இரண்டு கட்சிகளுமே கூட்டணியில் தான் உள்ளது இதே கூட்டணியில் தேர்தலை சந்திப்போம். சலசலப்புகள் இருந்தால் மட்டுமே முறையான கூட்டணியாக இருக்கும்.எதிராளிகள் போல் அடிமையாக இருந்து விடாமல் இருக்கிறோம், எனவும் பேசியுள்ளார்.

இதையும் படிக்க: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்!