பாஸ் கேட்ட அமைச்சர் ...! மாஸ் -ஆக கமெண்ட் செய்த சின்னத்தளபதி...!

பாஸ் கேட்ட அமைச்சர் ...!   மாஸ் -ஆக  கமெண்ட் செய்த  சின்னத்தளபதி...!

இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைக் கண்டு மகிழ அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் டிக்கெட் பாஸ் வாங்கிக்கொடுக்க வேண்டும் என அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், உங்கள் நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதாக கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. 
இந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக கொறாடா எஸ்.பி வேலுமணி, ஐபிஎல் போட்டிகளை பார்க்க அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக எஸ்.பி வேலுமணி கூறுகையில், "அதிமுக ஆட்சியில் 400 பாஸ்கள் எம்.எல்.ஏக்களுக்ககாக கொடுக்கப்பட்டதாகவும் தற்போது அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் பாஸ்கள் கொடுப்பது இல்லை. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் தேவை" என்று கூறியிருந்தார்.

 இதையும் படிக்க ;... என்னை சிறையில் அடைக்கலாம்; ஒருபோதும் முடக்க முடியாது - ராகுல்காந்தி பேச்சு!

 எஸ்.பி வேலுமணியின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னையில் ஐபிஎல் போட்டிகள் 4 ஆண்டுகளாக நடக்காத போது? நீங்கள் யாருக்கு டிக்கெட் வாங்கி தந்தீர்கள்.. ஐபிஎல் போட்டியை நடத்துவது உங்கள் நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான். 

ஜெய்ஷாவிடம் சொல்லி எங்களுக்கு வேலுமணிதான் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் வாங்கி தர வேண்டும். ஒரு எம்.எல்.ஏவிற்கு 5 டிக்கெட் கொடுத்தால் போதும்..பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்" என்றார். 

தமிழக வாழ்வுரிமை கட்சியின்  மானிய கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய  உதயநிதி ஸ்டாலின்,  " சமூக நீதியின் தலைநகரான தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்"  என்றார். மேலும் தமிழ்நாட்டை வடக்கில் இருந்து வந்தவர்கள் யாரும் வென்றது கிடையாது என்றும் சூசகமாக கூறினார். மற்றும்,  மாநில விளையாட்டு போட்டிகள் விரைவில் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். . தமிழகத்தில் கேப்டனாக முதல்வர் ஆட்சி செய்து வருகிறார். எப்போதெல்லாம் டிபென்ஸ்  ஆட வேண்டும், எப்போதெல்லாம் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று எங்களுக்கு முதலமைச்சர்  ஸ்டாலின் சொல்லிக் கொடுத்துள்ளார். என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,

இதையும் படிக்க;.. வயநாடு சென்ற ராகுல், பிரியங்கா...வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவிற்கு நேற்று ஒரு சிக்சரை அடித்த முதல்வர் ஸ்டாலின், டெல்டா நிலக்கரி சுரங்கம் ரத்து என இரண்டு சிக்ஸர்களை விளாசியுள்ளார்"  என அவர் கூறினார் . இவரின் அந்த சாதூர்யமான மற்றும் சாணக்கியத்தனமான  பேச்சுக்கு சட்டசபையில் பலத்த கரகோசமும் அவரின் கமெண்ட்டுக்கு அரங்கமே அதிர அனைவரும் சிரித்தனர்.