சேலம் : கொட்டி தீர்க்கும் கனமழை ; பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் : கொட்டி தீர்க்கும் கனமழை ; பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!

ஏற்காட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. சாலையில் ஓடும் மழை நீரால் இருசக்கர வாகனங்கள் அடித்து சென்றது. மேலும், ஓடைகளில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

ஏற்காட்டில் இன்று காலை முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிகிறது. இந்த நிலையில் ஏற்காட்டில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகலூர் கிராமத்தில் மரப்பாலம் என்ற பகுதியில் சிறிய ஓடை ஒன்று உள்ளது. இந்த ஓடையில் நீர்வரத்து அதிகரிப்பால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகலூர் என்ற பகுதியில் காற்றாற்று வெள்ளத்தால் ஊருக்குள் மழை நீர் புகுந்து சாலையில் வாகனங்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். சாலையில் நிறுத்திவைப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் அடித்து சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த மழையின் காரணமாக கட்டிட வேலைகள் மற்றும் காபி தோட்ட வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால், பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.