தஞ்சை பொிய கோயிலில் விமா்சையாக நடைபெற்ற சனிப்பிரதோஷம்...!

தஞ்சை பொிய கோயிலில் விமா்சையாக நடைபெற்ற சனிப்பிரதோஷம்...!

தஞ்சை பொிய கோயிலில் நடைபெற்ற சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனா். 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சனி பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக தஞ்சை பெரிய கோயிலில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு விபூதி, மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனா். 

இதேபோல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னா் உற்சவா், கோயில் உள் மண்டபத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷ விழா வெகு விமா்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து நந்தி வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிக்க : பேனா நினைவு சின்னம்; திரும்பப் பெறுகிறதா தமிழ்நாடு அரசு?

துவாக்குடியில் உள்ள திருநெடுங்களநாதர் கோயிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு  நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கு ஒலி எழுப்பியும், தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடியும் வழிபாடு செய்தனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை ஒட்டி நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றப்பட்டு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல் புதுச்சோி மாநிலம் திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் ஆனி மாத தேய்பிறை சனி பிரதோஷத்தை ஒட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.