4வது நாளா வச்சு செய்யும் வருமானவரித் துறை... புழுக்கத்தில் புது ஹீரோ!!

பிரபல ஜவுளி நிறுவனங்களான சரவணா செல்வரத்னம், சூப்பர் சரவணா ஸ்டோர்களில் 4-வது நாளாக வருமானவரித் துறையினரின் அதிரடி சோதனை தொடர்கிறது. 

4வது நாளா வச்சு செய்யும் வருமானவரித் துறை... புழுக்கத்தில் புது ஹீரோ!!

தமிழகத்தின் பிரபல ஜவுளி நிறுவனமான சரவணா செல்வரத்னம்,  சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் செந்தமான கடைகளில் 1-ம்தேதியில் இருந்து  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

4-வது நாளாக  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா செல்வ ரத்னம் துணி கடை, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நகைகடை, ஆகியவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதேபோல, தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மற்றொரு கடையான சரவணா செல்வரத்னம் கடையிலும் சோதனை நடந்து வருகிறது. மேலும் புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை சூப்பர் சரவணா ஸ்டோர்களிலும் வருமானவரித்துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான ராஜரத்தினம் வீடு தி.நகர் லட்சுமணன் தெருவில் இருக்கிறது. அங்கும் சோதனை நடந்து வருகிறது. 

மேலும் குரோம்பேட்டை, போரூர், புரசைவாக்கம் பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  சுமார் 12 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையின் காரணமாக அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   சோதனை முடிந்த பிறகே வரி ஏய்ப்பு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு இந்நிறுவனங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கோடிக் கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.