மீண்டும் கட்சியில் சசிகலா.. வாய்ப்பு இருக்கா? - எடப்பாடி பழனிசாமி உறுதிபட சொன்ன அந்த சொல் என்ன?

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

மீண்டும் கட்சியில் சசிகலா.. வாய்ப்பு இருக்கா? - எடப்பாடி பழனிசாமி உறுதிபட சொன்ன அந்த சொல் என்ன?

சேலம் மாவட்டத்தில் அதிமுக அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதனை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரங்கினை சர்வதேச கண்காட்சியில் தொடங்கி வைக்கவும், முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலமைச்சர் துபாய் சென்றதாக கூறப்பட்ட நிலையில், அதனை குடும்ப சுற்றுலாவாக தான் மக்கள் பார்ப்பதாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், விருதுநகர் பாலியல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பிருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள அதிமுகவின் அனைத்து மாவட்டங்களும், தலைமையும்  இணைந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், யாராலும் அதை எதிர்த்து புத்துயிர் கொடுக்க முடியாது என்பதால் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை என கூறினார்.

அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என குறிப்பிட்ட அவர், சசிகலா தொடர்பாக ஓபிஎஸ் கூறியிருப்பது தனிப்பட்ட முறையிலான கருத்து என்றும், அரசியல் ரீதியாக அதனை பார்க்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.