இரண்டாம் கட்ட அரசியல் பயணத்தை தொடங்கிய சசிகலா!

அதிமுக தொண்டர்களை தம் பக்கம் இழுக்கும் வகையில்  சசிகலா இன்று இரண்டாம் கட்ட அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

இரண்டாம் கட்ட அரசியல் பயணத்தை தொடங்கிய சசிகலா!

சென்னை, தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்பட்ட  சசிகலா, கிண்டி, கதிப்பாரா மேம்பாலம், போரூர் வழியாக பூந்தமல்லி சென்றடைந்தார்.

தொடர்ந்து, குமணன் சாவடியிலிருந்து சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய அவர், திருமழிசை, வெள்ளவேடு, பாக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

கடந்த மாதம் 26-ஆம் தேதி தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்கத் திருத்தணி சென்ற  சசிகலா, இரண்டாவது முறையாக மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்ததாக ஜுலை 5-ஆம் தேதி திண்டிவனம், ஜூலை 7-ஆம் தேதி வானூர், ஜூலை 8-ஆம் தேதி உளுந்தூர்பேட்டை எனத் தொடர் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ள  சசிகலா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.