பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியை அறிவித்தார் அன்பில் மகேஷ்...!

பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியை அறிவித்தார் அன்பில் மகேஷ்...!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வருகிற ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், மேல்நிலை வகுப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், தொடக்க பள்ளிகள் ஜூன் 5- ம் தேதி திறக்கப்படும் என்றும் கூறினார். 

இதையும் படிக்க : மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்... நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்...!

தொடர்ந்து பேசிய அவர், நாளை முதல் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், வெப்பசலனம் அதிகமாகும் பட்சத்தில் முதலமைச்சரின் ஆலோசனை கேட்டு பள்ளிகளின் திறப்பு தேதியில் மாற்றம் இருந்தால் பின்னர் அறிவிக்கப்படும் என விளக்கம் அளித்தார்.

மேலும் 2024-ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 18 -ம் தேதி நடைபெறும் எனவும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2024 ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.