ஆட்கொல்லி புலியை பிடிக்க அறிவியல் ரீதியாக நடவடிக்கை...

ஆட்கொல்லி புலியை பிடிக்க அறிவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு முதன்மை உயிரின வன பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

ஆட்கொல்லி புலியை பிடிக்க அறிவியல் ரீதியாக நடவடிக்கை...

ஆட்கொல்லி புலியை பிடிக்க அறிவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு முதன்மை உயிரின வன பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி  மாவட்டம் கூடலூர் பகுதிகளுக்குட்பட்ட முதுமலை, ஸ்ரீமதுரை ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும், 4 மனிதர்களையும் புலி அடித்துக் கொன்றது. இதையடுத்து புலியை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று சிங்காரா வனப்பகுதியில் புலியின் நடமாட்டம் தென்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு முதன்மை உயிரின வன பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், புலியை பிடிக்கும் பணி தொடர்ந்து 12வது நாளாக நடைப்பெற்று வருவதாகவும், புலியின் பாதுகாப்பு, வனத்துறையினர் பாதுகாப்பை கருத்தில் வைத்தே பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

வேட்டை தடுப்பு பழங்குடியினர்களின் உதவியுடன் புலியை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புலி பிடிபட்டவுடன் கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும், நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மனிதன்-வன விலங்குகள் இடையே நடக்கும் மோதலை தடுக்கும் வகையில் வனவிலங்குகளை கண்டறிந்து ரேடியோ காலரிங் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.