கள் என்பதை இனி பனம்பால், தென்னம்பால் என்று சொல்ல வேண்டும் -சீமான்...!!

கள் என்பதை இனி பனம்பால், தென்னம்பால் என்று சொல்ல வேண்டும் -சீமான்...!!

கள் என்பதை இனி பனம்பால், தென்னம்பால் என்று சொல்ல வேண்டும் என தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளர்.

ஆதி திரைக்களம் தயாரித்து இயக்குநர் மு. களஞ்சியம் இயக்கத்தில் நடிகர் சீமான் நடிப்பில் உருவான படம் முந்திரிக்காடு. இத்திரைப் படத்தின் சிறப்புக் காட்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் திரையிடப் பட்டது. 

இந்த சிறப்பு காட்சியில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் ஆர் கே செல்வமணி, ஆர்.வி உதயகுமார் மற்றும் முந்திரிக்காடு படக்குழுவினர் படத்தை பார்த்தனர். 

தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''ஈழத்தில் நடந்தது மட்டும் படுகொலை அல்ல. குடிக்க வைத்து கொல்வதும் படுகொலை தான்.  தாலிக்கு தங்கம் கொடுத்ததாக பேசும் அரசு, குடிக்க வைத்து பல லட்சம் பெண்களின் தாலியை அறுக்க வைத்ததும் சாதனை தானே'' என்று கூறினார். மேலும், 95 சதவிகித குற்றங்களுக்கு மதுபோதை தான் காரணமாக இருக்கிறது எனச் சுட்டிக்காட்டிய அவர் இன்றைக்கு மது வருவாயில் தான் அரசே நடக்கிறது எனவும் தெரிவித்தார்.

 தொடர்ந்து, கள் என்பது மதுபோதையில் வராது எனக்கூறிய அவர் சங்க இலக்கியங்களில் கள் இருப்பதாகவும் அது உணவின் ஒரு பகுதி தான் எனவும் குறிப்பிட்டார். மேலும் கள் என்பதை இனி பனம்பால், தென்னம்பால் என்று சொல்ல வேண்டும் எனக்கூறிய அவர் கள் குடித்து விட்டு யாரும் இறந்தது கிடையாது எனவும் குறிப்பிட்டார்.  ஒருவேளை ஆந்திரா, புதுச்சேரி போல கள்ளு கடையும் இங்கு இருந்தால், சாராய  வியாபாரம் படுத்துவிடும் எனக்கூறிய அவர் கள்ளை விரட்டி விட்டு மதுவை திறந்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.‌