சென்னை விமானநிலையத்தில் அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்...

சென்னை விமானநிலைய சரக்ககப் பிரிவில் அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

சென்னை விமானநிலையத்தில் அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்...

சென்னை பழைய விமானநிலையத்தில் உள்ள காா்கோ பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கு புறப்படவிருந்த ஒரு சரக்கு விமானத்தில் ஏற்ற வந்திருந்த சரக்கு மற்றும் கொரியா் பாா்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அமெரிக்காவிற்கு அனுப்ப வந்திருந்த 4 பாா்சல்களில் 2 பாா்சல்கள் சென்னை எத்திராஜ் சாலை முகவரியிலிருந்தும், அடுத்த 2 பாா்சல்கள் சென்னை சேத்துப்பட்டு முகவரியிலிருந்தும் வந்திருந்தன. அந்த பாா்சல்களில் மிகவும் முக்கியமான ஆவணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டி இருந்தனிலையில் 4 பாா்சல்களிலும் முக்கியமான ஆவணங்கள் என்று ஒரே மாதிரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு  சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து பாா்சல்களில் உள்ள செல்போன் எண்களை தொடா்பு கொண்டபோது பாா்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்கள், முகவரி அனைத்துமே போலியானவை என்று தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 4 பாா்சல்களையும் சென்னையில் பதிவு செய்திருந்த ஏஜென்சி நிா்வாகிகளிடம் விசாரணை நடத்தினா். அப்பொது டெல்லியை சோ்ந்த ஒருவா் அங்கிருந்து ஆன்லைன் மூலம் இந்த பாா்சல்களை சென்னை முகவரியிலிருந்து பதிவு செய்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் போதை பொருள் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சுமார் 5 ஆயிரம் போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா். இந்த மாத்திரைகளின் சா்வதேச மதிப்பு 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
இதையடுத்து போலி முகவரியில் இந்த போதை மாத்திரை பாா்சல்களை அமெரிக்காவிற்கு அனுப்ப முயன்ற டெல்லி ஆசாமிகளை தேடி வருகின்றனா்.