"அனைத்து பாரதிய அதிமுக..." செல்லூர் ராஜூ பதில்!!

"அனைத்து பாரதிய அதிமுக..." செல்லூர் ராஜூ பதில்!!

எப்பொழுது தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்  செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட  பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ஒரு காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை கருணாநிதியே ஆதரித்ததாக தெரிவித்துள்ளார். 

மேலும், இந்தியா விருப்பமா? பாரத் விருப்பமா? என்கிற கேள்விக்கு, தனக்கு இந்தியா தான் விருப்பம் என்று பதிலளித்துள்ளார்.  

அதே போல், எதிர்காலத்தில், இந்தியாவின் பெயர், பாரத் என மாற்றப்பட்டால், அனைத்து இந்திய அதிமுக என்பதற்கு பதிலாக, அனைத்து பாரதிய அதிமுக என கட்சியின் பெயரை மாற்றுவது குறித்து பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || "புதிதாக அரசியலுக்கு வந்துள்ள உதயநிதி, பழைய அரசியலை செய்கிறார்" பிரேமலதா விஜயகாந்த்!!