செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.

செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு  - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.

டாஸ்மாக் மது விற்பனையில் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழலுக்கு காரணமான செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளதாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கொள்கை முடிவு என்ற பெயரில், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மதுவிலக்கு தளர்த்தப்படாமல், நாளுக்கு நாள் மது விற்பனை அதிகரித்து வருவதால், குடிப்பழக்கம் இல்லாதவர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக கூறினார்.

மேலும், தமிழகத்தில் கொள்கை முடிவு என்ற பெயரில் கடந்த 20 வருடத்திற்கு மேலாக ஆட்சியாளர்களால் மதுவிலக்கு தளர்த்தப்படவில்லை என்று குற்றம்சாட்டியவர், தமிழக அரசு மது பாட்டில்களை நாளுக்கு நாள் விற்பனையை அதிகரித்து வருகிறது என்றும், இதனால் குடிப்பழக்கம் இல்லாதவர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என்று சாடினார்.   

தொடர்ந்து, தமிழகத்தில் 19 மதுபான ஆலைகள் செயல்படுகிறது எனவும், மது பாட்டில்களுக்கு வரிகள் செலுத்தாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் பார்களில் லட்சக்கணக்கான மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது என்றும் கூறினார்.   அதோடு, மது பாட்டில் விற்பனைகளில் பல கோடி ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்தவும்,  அவருக்கு துணை போன முதல்வர் மு.க. ஸ்டாலினிடமும் விசாரணை நடத்த  வேண்டும் என வலியுறுத்தி கவர்னரிடம் மனு அளித்துள்ளதாகவும் கூறினார். 

டாஸ்மாக் மதுபானம் விற்பனையில் ரூ. 1 லட்சம் கோடி ஊழலுக்கு காரணமான செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு, டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூட வேண்டும் என்றும்,  19 மதுபான ஆலைகளையும் மூட வேண்டும் என்றும், மதுபான விற்பனையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தினார். 

இதையும் படிக்க      |  வாகனங்களுக்கான வரியை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்..! - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.