சாலையில் ஆறாய் ஓடும் கழிவுநீர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் கடும் அவதி.

சாலையில் ஆறாய் ஓடும் கழிவுநீர்: அதிகாரிகளின் அலட்சியத்தால்  மக்கள் கடும் அவதி.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சி சாலையில் கழிவுநீர் ஆறாய் ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பாரிவாக்கம் இணைப்பு சாலையில் முறையான மழை நீர் கால்வாய் இல்லாத காரணத்தால் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து சாலைகளில் அவ்வப்போது வருவது வழக்கம் இந்த நிலையில் பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வரும் நிலையில் புதிதாக அமைக்கப்படும் சாலையின் ஓரத்தில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது  பாரிவாக்கம் இணைப்பு சாலை வழியாக செல்லக்கூடிய நகராட்சி மழைநீர் கால்வாய் மழை நீர் செல்லாத வகையில் மண்ணை கொட்டி மூடி வைத்திருப்பதால் கழிவுநீர் அனைத்தும் சாலையில் தேங்கி சாலையில் ஆறாய் தேங்கி ஓடுகிறது.

இதனால், அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் நிலையில் அரசு பேருந்துகள் அனைத்தும் இந்த சாலை வழியாக பூந்தமல்லி பஸ் நிலையத்திற்கு சென்று வருகின்றன. சாலை முழுவதும் கழிவுநீர் ஆறாக ஓடுவதால் வாகன ஓட்டிகளும் வேலை முடித்து செல்லும் பொது மக்களும் மூக்கை பிடித்தபடி கடும் சிரமத்திற்கு மத்தியில் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடக்கும் போது முறையாக இங்கு உள்ள கழிவுநீர் செல்ல வழிவகை ஏதும் நகராட்சி அதிகாரிகள் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர் அதிகாரிகளின் மெத்தன போக்கால் தற்போது இந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க    | அரசு பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை, முறையாக பாடம் நடத்துவது இல்லை”- பெற்றோர்கள் குற்றச்சாட்டு.