முறையாக அமைக்கப்படாத சாலைகள்.. மழை நீரோடு கலந்து ஓடும் சாக்கடை... அருப்புக்கோட்டையில் பொதுமக்கள் அவதி...

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர்.

முறையாக அமைக்கப்படாத சாலைகள்.. மழை நீரோடு கலந்து ஓடும் சாக்கடை... அருப்புக்கோட்டையில் பொதுமக்கள் அவதி...

அருப்புக்கோட்டையில் இன்று அதிகாலை முதலே அருப்புக்கோட்டை பாலையம்பட்டி, ஆத்திபட்டி , சொக்கலிங்கபுரம் , புளியம்பட்டி , ராமசாமிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்த நிலையில் காலை வேளையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. தொடர்ச்சியாக விட்டுவிட்டு மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

காலையில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குமரன் புதுத்தெரு, காந்தி மைதானைம் , டெலிபோன் ரோடு, சொக்கலிங்கபுரம் , விருதுதகர் ரோடு உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

போக்குவரத்து அதிமுள்ள சாலைகளில் மழைநீர் செல்ல வழியின்றி சாக்கடைநீரோடு குளம் போல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அறுவெறுப்புடன் அப்பகுதிகளை கடந்து சென்றனர். மேலும் சாலைகளில் உள்ள மேடுபள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் தவறி விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகளின் முன்பு சாக்கடை நீர் தேங்கியிருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. முறையான திட்டமிடல் இன்றி சாலை அமைப்பதே இதுபோன்று சிரமத்திற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.