சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி… விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும்!  

’சிங்கார சென்னை 2.0 திட்டம்’ தொடங்கப்படும் என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி… விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும்!   

’சிங்கார சென்னை 2.0 திட்டம்’ தொடங்கப்படும் என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரில், 2021 - 22ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அவர், 335 கோடி ரூபாய் மதிப்பில், சென்னையில் 3 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் எனவும், அதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 2 ஆயிரத்து 56 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டமும், 2 ஆயிரத்து 371 கோடி செலவில் நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்த அமைச்சர், ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.