"திறமையாக ஏமாற்றுவது தான் திராவிட மாடல்" - நத்தம் விஸ்வநாதன்

பாஜக உடனான கூட்டணி என்பது இப்போது மட்டுமல்ல எப்போதும் கிடையாது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மக்களுக்கு எதுவும் செய்யாமல் வாய் விளம்பரங்களாலும் வெற்று விளம்பரங்களாலும்  அனைத்தையும் செய்து விட்டோம் என  ஏமாற்றி வருவது தான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறினார். 

இதையும் படிக்க : ஆசிய விளையாட்டின் 10வது நாள்: 7 பதக்கங்களை வென்றது இந்தியா!

உதவித்தொகைக்கும் உரிமை தொகைக்கும்m கூட  வித்தியாசம் தெரியாமல், மக்களை எப்படி திறமையாக ஏமாற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், பாஜக உடனான கூட்டணி என்பது இப்போது மட்டுமல்ல எப்போதும் கிடையாது எனவும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.