ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை...!

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை...!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில், இதுவரை 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். 

வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் இதுவரை 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி,  இதுவரை 64 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும், 51 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 11 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க : ஆளுநருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த முத்தரசன்...!

மேலும் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைவதால், வெளியூரில் இருந்து வந்தவர்கள் அத்தொகுதியில் இருந்து வெளியேற  வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்தம் 238 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஆயிரத்து 430 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப் படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், வாக்குசாவடிகளில் மட்டும் ஆயிரத்து 206 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.