"சமூக நீதியை இந்த மண்ணில் உருவாக்கிக் காட்ட வேண்டும்....! அதுதான் திராவிட இயக்கத்திற்கு ......" . -கனிமொழி எம்.பி.

"சமூக நீதியை இந்த மண்ணில் உருவாக்கிக் காட்ட வேண்டும்....!  அதுதான் திராவிட இயக்கத்திற்கு ......" .  -கனிமொழி எம்.பி.

கோவில்பட்டி அருகே  தியாகி இம்மானுவேல் சேகரனார் வெண்கலச் சிலை திறப்பு விழா - கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தில் விடுதலை போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊர்த் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தியாகி இம்மானுவேல் சேகரனாரின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், மக்களின் உரிமைக்காக மிகப்பெரிய மாநாட்டை நடத்திய ஆளுமை தியாகி இம்மானுவேல் சேகரனார் தேர்தலின் போது, நான் இப்பகுதிக்கு வந்திருந்த போது இந்த சிலை சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அதனை சரி செய்து தர வேண்டும், மீண்டும் பொலிவோடு சிலை நிறு வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த பொலிவுடன் இருக்கக் கூடிய சிலையை திறக்கக் கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தமைக்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும்,  நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி மக்கள், சமூகத்தின் விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் அற்பணித்துக் கொண்ட தியாகியின் வழியே நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் கூறினார். 

இதையும் படிக்க    ]  ”ரஜினியிடம் ஒய். எஸ்.ஆர்.காங்கிரசார் மன்னிப்பு கேட்க வேண்டும்” - சந்திரபாபு நாயுடு ட்வீட்!

மேலும், சமூக நீதியை இந்த மண்ணில் உருவாக்கிக் காட்ட வேண்டும். அதுதான் திராவிட இயக்கத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்திருக்கக் கூடிய பணிகளுக்கும் செய்யக் கூடிய உண்மையான வழிகாட்டுதலாக இருக்கும் என்றார்.

இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க    ]  கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்குமா அதிமுக...?