2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிப்பவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு!

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் 2 மணி நேரத்திற்கு மேலாக பட்டாசு வெடிப்பவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைத்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருதி தீபாவளி தினத்தன்று 2 மணி நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதை கண்கானிக்கவும், விதிகளை மீறுபவர்களை கைது செய்யவும் , தனிப்படைகள் அமைத்துள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : தீபாவளி எதிரொலி: சிறப்பு பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள்...!

அதன்படி, சென்னையில் உள்ள 102 காவல்நிலையங்களில் துணைகாவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 125 டெசிபலுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பவர்கள் மற்றும் நேரக்கட்டுப்பாட்டுகளை மீறுபவர்களை தனிப்படைக்குழுவினர் கைது செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.