தமிழக முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!!

தமிழக முழுவதும் பல்வேறு கோயில்களில் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழக முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள்:

ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதில் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்  வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவை: வனபத்ரகாளியம்மன் கோயிலில் கொடியேற்ற விழா:

இதேபோல், கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைபெற்றது.

இந்த விழாவில், பொதுமக்கள் பவானியாற்றில் இருந்து  சிம்மவாகனம் பொறிக்கப்பட்ட கொடிமரம் திருவீதி உலா உடன் கோவிலை வந்தடைந்தன. பின்னர்,மேள,தாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை: திருப்பனந்தாள் செஞ்சடை காளியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குடம் திருவிழா:

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் செஞ்சடை காளியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குடம் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில், பொதுமக்கள் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 500 லிட்டர் பாலை கொண்டு காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

சிவகங்கை: ஸ்ரீ சித்தர் முத்துவடுகநாதர் 190-வது குருபூஜை நிகழ்ச்சி:

இதேபோல், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஸ்ரீ சித்தர் முத்துவடுகநாதர் 190-வது குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சித்தர் முத்துவடுகநாதருக்கு, பால், பன்னீர் பஞ்சாமிர்தம் சந்தனம் உள்ளிட்ட வாசனது திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.